தேசிய சின்னங்கள், மற்றும் அடையாளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்திர இதுகுறித்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ் எம் சுப்ரமணியம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்கமைய குறித்த உத்தரவில் தேசியக்கொடி மற்றும் மத்திய, மாநில அரசுகளின் சின்னங்கள், முத்திரைகளை தவறாக பயன்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் அவ்வாறு ஒட்டப்பட்டுள்ள அல்லது வைக்கப்பட்டுள்ள முத்திரைகளை ஒரு மாதத்துக்குள் அகற்ற வேண்டும் என தமிழக டிஜிபி பத்திரிகை மற்றும் ஊடகங்களின் வாயிலாக பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிட வேண்டும்.
அதனை பின்பற்றாதவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
மேலும் மத்திய மாநில அரசின் சின்னங்களை தவறாக பயன்படுத்துவது தொடர்பில் தகவல்களை பெறுவதற்கும், வீதி மீறளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து காவல் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை கண்டிப்பாக அமுல்படுத்த வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி இரண்டு வாரங்களுக்குள் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் இது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து எதிர்வரும் 26 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.



