எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு படத் திறப்பு விழாவை நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தற்போது நாட்டில் நிலவும் தொற்றுப் பரவல் காரணமாக பட்ட திருவிழாவை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வருடா வருடம் பொங்கல் தினத்தன்று வல்வெட்டிதுறை உதயசூரியன் திடலில் நடத்தப்பட்டு வரும் பட்டத் திருவிழா இம்முறையும் நடத்துவதற்கு ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்து அறிவித்திருந்தனர்.
இதற்கமைய பட்ட திரு விழா ஏற்பாட்டுக் குழுவினருக்கும் பிரதேச மக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று மாலை இடம் பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் பட்ட திருவிழாவை தற்கால சூழ்நிலையில் நிறுத்துமாறு பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இம்முறை வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா இடைநிறுத்தப்படுவதாக தீர்மானிக்கப்பட்டது .



