கொவிட் தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்கள் பொது இடங்களுக்கு பிரவேசிக்கும் போது கொவிட் தடுப்பூசி செலுத்திய அட்டைகளை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பது தொடர்பான சட்ட தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன பூஸ்டர் தடுப்பூசி அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்
அத்துடன் தற்போதைய நிலையில் பூஸ்டர் தடுப்பூசியை அனைவரும் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இரண்டாவது தடுப்பூசி செலுத்திய பின்னர் மூன்று மாதங்களில் மூன்று தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.



