நிலவும் சீரற்ற வானிலை காரணத்தினால் சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய இராஜங்கனை நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகளும், அங்கமுவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகளுமே திறக்கப்பட்டுள்ளன.
அத்துடன் இராஜங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவில் இருந்து 2400 கன அடி நீர் கால ஓயாவுக்கு பாய்ச்சப்படுகிறது
ஆகவே இதனை அண்டிய பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



