கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையாக விலை உயர்த்தப்பட்டு வாந்த முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் தற்போது குறைவடைந்துள்ளது.
இந்நிலையில் 750 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சி தற்போது 700 ரூபாவில் இருந்து 690 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதன் பிரகாரம் கோழி இறைச்சியின் விலை 50 முதல் 60 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.
முட்டை ஒன்றின் விலை மூன்று ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் 26 ரூபாவாக இருந்த முட்டை தற்போது 23 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.



