பாடசாலை போக்குவரத்து சேவைக்கான கட்டணத்தை இன்று முதல் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணத்தை 20 சதவீதத்தால் உயர்த்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எரிபொருள் மற்றும் வாகன உதிரி பாகங்களின் விலை அதிகரிப்பு காரணத்தால், தமக்கான எந்த வித நிவாரணங்களையும் அரசாங்கம் இதுவரை வழங்கவில்லை .
மேலும் குறைந்த விலையில் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்த படுவதால் பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கி வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கத்திற்கு முன்னதாகவே தெளிவுபடுத்தியிருந்த போதிலும் அது குறித்து எந்தவிதமான தீர்மானமும் எட்டப்படவில்லை.



