மீண்டும் மூடப்படும் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்.

0

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படுகின்றது.

இதற்கு அமைய குறித்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்று முதல் மூடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறை காரணத்தால் மசகு எண்ணெய் கொள்ளளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதன் காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதன் பிரகாரம் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் அன்றாடம் 6,500 மெற்றிக் டன் மசகு எண்ணெய் சுத்திகரிக்கப்படுகிறது.

ஆகவே டொலர் பற்றாக்குறை காரணத்தினால் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கடந்த நவம்பர் மாதம் 15 ஆம் திகதி தற்காலிகமாக மூடப்பட்டு 22 நாட்களுக்கு பின் மீள திறக்கப்பட்டது.

மேலும் இன்று முதல் மூடப்படும் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இந்த மாத இறுதியில் மீள திறக்கப்படும் என வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Leave a Reply