18 வயது பூர்த்தியானவர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

0

இலங்கையில் 18 வயது பூர்த்தியான உடன் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு விசேட ஏற்பாடுகள்முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த விடயம் தொடர்பிலான அறிவிப்பினை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அத்துடன் 18 வயதினை பூர்த்தி செய்வோரின் பெயர்கள் பிரதான தேர்தல் இடாப்பில் பதிவு செய்யப்படுவதற்கு முன்னதாக தற்காலிக அடிப்படையில் பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பதிவு செய்வதன் மூலம் தேர்தல்களில் வாக்களிப்பதற்கான சட்ட அங்கீகாரம் வழங்கப்படுகின்றது.

மேலும், 2003.06.01 முதல் 2004.01.31 வரையில் பிறந்தவர்கள் தேர்தல் இடாப்பில் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு கோர முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply