அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?

0

இலங்கையின் ஆறு முக்கிய அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாளியுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் நாட்களில் அமைச்சரைவயில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் கீழ் மிகவும் முக்கியமான ஆறு அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது. ராஜாங்க அமைச்சுப் பதவிகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

செயலணிகள் மற்றும் முக்கிய அரச நிறுவனங்களின் பிரதானிகளின் பதவிகளிலும் மாற்றம் செய்யப்பட உள்ளது.

அரசாங்கம் புத்தாண்டில் புதிய பயணமொன்றை மேற்கொள்ள உத்தேசித்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் இந்த மாற்றங்கள் செய்யப்படுவதாகவும் அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் புத்தாண்டில் மாற்றங்களுடன் புதிய பயணமொன்றை முன்னெடுக்க வேண்டுமென அரசதலைவரிடம் சில அமைச்சர்கள் அண்மையில் கோரியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply