சென்னையில் நாளை முதல் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதற்கு தடை.

0

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் தனித்தனியாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது.

சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் கடற்கரைகளில் பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொது இடங்களில் பொதுமக்கள் ஒன்றுகூடி கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டுமெனவும் வீடுகளிலேயே புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடவேண்டும் எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

அவ்வாறு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறி மதுபோதையில் வாகனங்களில் சுற்றுவோர் கைது செய்யப்படுவார் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் சென்னை மாநகர காவல் துறையினர் நேற்றைய தினம் இரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பாக புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளனர்.

அதில் நாளை இரவு 12 மணிக்கு பிறகு பொது மக்கள் வெளியில் நடமாட வதற்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் சென்னை காவல்துறை கமிஷனரால் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார்.

அதாவது தற்போதுள்ள சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு மேலும் கலந்து ஆலோசனை செய்யப்பட்டு சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளைய தினம் 12 மணிக்கு மேல் அத்தியாவசிய தேவைகள் தொடர்பான வாகன போக்குவரத்தை தவிர மற்ற வாகன போக்குவரத்திற்கு காலை 5 மணி வரை அனுமதி இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே பொதுமக்கள் அனைவரும் நாளை இரவு 12 மணிக்கு முன்பு தங்கள் பயணங்களை முடித்துக் கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply