இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் , இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் எடையுடைய பால் மாவின் விலை 150 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.
அத்துடன் 400 கிராம் எடையுடைய இறக்குமதிசெய்யப்பட்ட பால் மாவின் விலை 60 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் , ஒரு கிலோ கிராம் எடையுடைய இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவின் புதிய விலை 1345 ரூபா எனவும், 400 கிராம் எடையுடைய பால் மாவின் விலை 540 ரூபா எனவும் குறிப்பிடப்படுள்ளது.



