தொடருந்து திணைக்கள அதிகாரிகளுடன், தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இதற்கமைய குறித்த கலந்துரையாடல் இன்று முற்பகல் 10 மணியளவில் நடைபெறவுள்ளது.
அத்துடன் இந்த கலந்துரையாடலில் தாம் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு எடுக்கப்படாததன் காரணத்தால் உடன் அமுலாகும் வகையில் தொழில் சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் நேற்று நள்ளிரவு முதல் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுக்கவிருந்த நிலையில் , அதனை இன்றைய தினம் வரையில் தொடருந்து நிலைய அதிகாரிகள் சங்கம் பிற்போட்டுள்ளனர்.
இருப்பினும் தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் , பொதிகளை பொறுப்பேற்றல் மற்றும் பயணச் சீட்டுகளை விநியோகித்தல் போன்ற செயற்பாடுகளில் இருந்து தொடர்ந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



