இலங்கையில் ஒமிக்ரோன் அலை ஏற்படும் ஆபத்து!

0

இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றுப்பரவல் ஏற்படக்கூடிய சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் நாட்களில் ஒமிக்ரோன் அலை உருவாகும் அறிகுறிகள் நாட்டில் தென்படுவதாக நிபுணத்துவ மருத்துவர் டொக்டர் மல்காந்தி கல்ஹேன தெரிவித்துள்ளார்.

குறித்த பண்டிகைக் காலத்தில் மக்கள் பொறுப்புணர்ச்சியின்றி கோவிட்டை மறந்து செயற்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன் மிகவும் வேகமாக பரவும் ஒமிக்ரோன் தொற்று இலங்கையிலும் ஓர் அலையாக உருவாக கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இந்த ஆபத்தினை தவிர்த்துக் கொள்ள வேண்டுமாயின் பொது மக்கள் அனைவரும் சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply