மக்களின் பாதுகாப்பு கருதி கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் 12 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் 16 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும் 3வது தடுப்பூசியை 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்க அனைத்து மாவட்டங்களிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.



