மகாராஷ்டிராவில் கொவிட் பெருந்தொற்று காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன.
இந்நிலையில் தற்போது கொவிட் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைவடைந்து 1 முதல் 12 ஆம் வகுப்புகள் திறக்கப்பட்டு கல்விச் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கமைய தரம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு மார்ச் மாதம் ஆரம்பமாகி ஏப்ரல் மாதம் வரையில் நடைபெறுகின்றது.
இதில் 12 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் ஆரம்பமாகி ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி நிறைவு பெறும்.
குறித்த தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்படும்.
12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி முதல் தொடங்கி மார்ச் மாதம் 3ஆம் தேதி வரை நடைபெறும்.
அவ்வாறு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகி ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி வரையில் நிறைவுபெறும்.
இதற்கான தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் 2ஆவது வாரத்தில் அறிவிக்கப்படும்.
மேலும் 10-ம் வகுப்பு மாணவர்களின் செய்முறை தேர்வு மார்ச் 14-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 25-ந் தேதி வரை நடைபெறும்.
தேர்வு கால கட்டத்தில் கொரோனா விதிகளை மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



