எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு மேல் மாகாணத்தில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
இதற்கமைய மேல் மாகாணத்தினுள் விசேட கடமைகளுக்காக காவல்துறையினரை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ட காவல்துறை அத்தியகட்சருமான நிஹால் தல்த்துவ தெரிவித்துள்ளார்.
அத்துடன் போக்குவரத்தை கட்டுப்படுத்த சுகதர வழிமுறைகளை நடைமுறைப் படுத்த மோசடியில் ஈடுபடும் வியாபாரிகளின் செயற்பாடுகள் மற்றும் முடிச்சு மாற்றுகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அவ்வாறு கடந்த வருட அறிக்கையின்படி டிசம்பர் மாத கடைசி இரு வாரங்களும் நாட்டில் வாகன விபத்துகள் அதிகமாக பதிவாகும் காலமாகும்.
இதன் பிரகாரம் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகள் குறித்த தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



