இரண்டாவது கப்பலில் இருந்து பெறப்பட்ட லிட்ரோ எரிவாயு மாதிரிகளும் போதுமான தரத்தை கொண்டிருக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய குறித்த விடயத்தை நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகிய வண்ண தெரிவித்துள்ளார்.
அத்துடன் தென்னிலங்கை ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.



