நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ச்சியாக இலங்கைக்கு தென்கிழக்காக நிலைகொண்டுள்ளது.
இதன் பிரகாரம் இலங்கையில் அடுத்த 48 மணித்தியாலங்களில் அருகிலுள்ள கடற்பரப்பு கிளை விட்டு விலகி கிழக்குத் திசையில் நகர கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் வடக்கு, வடமத்திய,, கிழக்கு, மத்திய, மற்றும் ஊவா மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும்.
அவ்வாறு நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.
ஆகவே இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அனைவரும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறனர்.



