சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்.

0

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை விழா மிக சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொவிட் தொற்று பரவல் குறைவடைந்து வருவதை தொடர்ந்து சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு கூடுதல் தளர்வுகளை அரசு அளித்து வருகின்றது.

இதற்கமைய குறித்த கோவிலுக்கு நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

இவ்வாறு கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவிலில் தங்கி பம்பையில் குளிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் அவர்கள் ஆற்றில் பலி தர்பணம் செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள்.

இதற்காக அந்த பாதையில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அப்பாச்சி மேட்டில் சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு சபரிமலை சன்னிதானம் செல்லும் பக்தர்கள் அங்கு இரவு நேரத்தில் தங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் அங்கு 500அறைகள் தயார் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply