நாட்டில் கோதுமை மாவின் விலை அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் பாண் மற்றும் ஏனைய பேக்கரி பண்டங்களின் விலை அதிகரித்துள்ளது.
அத்துடன் சந்தையில் கிடைக்கும் கோதுமை மாவை பயன்படுத்தி உணவுப்பண்டங்களை தயாரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் தற்போதைய நிலையில் மாவைப் பயன்படுத்தி பாண் தயாரிக்கும் போது பாண் சரியான பதத்துக்கு பொங்கி வராமையால் , மேற்பகுதி வெடித்துவிடும் என்கின்றார்கள்.
இதன் பிரகாரம் தமது உற்பத்தியின் வடிவத்திலும் சுவையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உற்பத்தி குறைவடைந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் சில பேக்கரி பண்டங்களின் விலை அதிகரித்துள்ள போதிலும் பாண் சரியான எடையில் என நுகர்வோர் குறிப்பிடுகின்றனர்.
இதன்படி ஒரு பாண் 450 கிராம் எடையுள்ளதாக இருக்க வேண்டும்.
ஆனால் சில இடங்களில் வாங்கும் பாண் 332 கிராம் உள்ளதாகவும் ரோஸ் பாண் 90 கிராம் எடை உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.



