இலங்கையில் மூன்றாவது கொவிட் தடுப்பூசியினை பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை
மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராவும் பூச்சிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இலங்கையில் மூன்றாவது கொவிட் தடுப்பூசியினை பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்தை கடந்துள்ளது .
நாட்டில் இதுவரை காலமும் மூன்றாவது தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 656,942 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும் நேற்றைய தினத்தில் மாத்திரம் 72 ஆயிரத்து மூன்று பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இலங்கையை மீண்டும் முடக்குவது தொடர்பில் இதுவரையில் எந்தவிதமான தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் நத்தார் பண்டிகை தினத்தை முன்னிட்டு நாட்டை முடக்குவது தொடர்பில் உத்தியோகபூர்வமான கலந்துரையாடல்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
அத்துடன் நாட்டில் மிகவும் வெற்றிகரமான தடுப்புச் திட்டத்தை அரசாங்கம் மிகவும் சிரமத்துடன் அமுல்படுத்தியது.
அதன் பின்னர் நாடு திறக்கப்பட்டாலும் நாட்டில் இந்த நோய் முற்றாக கட்டுப்படுத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கையில் பெரும்பான்மையான மக்கள் தடுப்பூசியினை பெற்றுக்கொண்டுள்ளனர். மேலும் இதுவரையில் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் காலம் தாழ்த்தாது விரைந்து சென்று தடுப்பு சீனி பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறனர



