மாவீரர் தின நிகழ்வுகளை நடத்த நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு.

0

மாவீரர் வார நிகழ்வுகளை நடத்துவதற்கு யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் சில காவல்துறை நிலையங்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய நீதிமன்றங்கள் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.

இதற்கமைய கிளிநொச்சி மாவட்டத்தில் 51 பேருக்கு, மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கு வீடியோ சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் நேற்று தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் காவல்துறை அதிகாரப் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மாவீரர் நினைவு தின நிகழ்வுகளை நடத்துவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் முல்லைத்தீவு, முள்ளியவளை மற்றும் வவுனியா காவல்துறை பிரிவுகளிலும் சிலருக்கு மாவீரர் தின நிகழ்வுகளை நடத்த நீதிமன்றங்கள் தடை உத்தரவுகளை பிறப்பித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply