தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கனடாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் நியமிக்கப்பட்ட சட்ட நிபுணர்கள் குழாம் கடந்த வாரம் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு பல சந்திப்புகளிலும் முன்னெடுத்திருந்தது.
அத்துடன் தற்போது கனடா சென்றுள்ள எம். எ சுமந்திரனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியமும் இணைந்து கொள்வார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் இருவரும் கனடாவில் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து பல்வேறு கலந்துரையாடல்களை மேற்கொள்ள உள்ளனர்.
இதன் பின்னர் அமெரிக்காவிற்கு சென்று அந்நாட்டு அரசாங்கத்துடனும் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
பின்னர் பிரித்தானியாவுக்கான விஜயத்தையும் இந்த குழு மேற்கொண்டு பிரித்தானியாவின் வெளிவிவகார செயலர் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடல் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



