சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை சிகரட்டுக்களுடன் நபர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய வத்தளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட கல்யாணி வீதியில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே குறித்த சிகரெட் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 290,000 ரூபாவுக்கு அதிகமான பணம் மற்றும் சிற்றுந்து ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி ஐந்து லட்சத்திற்கும் அதிகம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.



