நாட்டில் நேற்றைய தினம் மேல் மாகாணத்தில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதற்கமைய குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத 440 பயணிகள் பஸ்கள் மற்றும் 92 குளிரூட்டப்பட பஸ் சாரதியினருக்கு காவற்துறையினர் நேற்றைய தினம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத 562 விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேல் மாகாணத்தை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சுற்றிவளைப்பில் 494 காவற்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



