அமைச்சர்கள் சிலவற்றின் நிறுவனமற்றும் சட்ட கட்டமைப்பை திருத்தியமைத்து புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த திருத்தங்கள் நேற்றைய தினம் முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேசிய முன்னுரிமை வேலைத்திட்டத்தின் கீழ் நிறுவனம் மற்றும் சட்ட கட்டமைப்பில் ஜனாதிபதி செயலகம் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
அத்துடன் பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவ ராஜாங்க அமைச்சின் நிறுவன மற்றும் சட்ட கட்டமைப்பு திருத்தப்பட்டுள்ளது.
மேலும் நிதியமைச்சு, வெளிவிவகார அமைச்சு, திறன் மேம்பாடு தொழில் கல்வி ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க அமைச்சு , வெகுசன ஊடக அமைச்சின் நிறுவனம் மற்றும் சட்ட கட்டமைப்பு ஆகியவற்றிலும் குறித்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



