ஐக்கிய மக்கள் சக்தியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் காவற்துறையினர் முன்வைத்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியினர் நாளையதினம் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்தனர்.
இதற்கமைய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டலுக்கு அமைய குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்குமாறு காவல்துறையினர் நீதிமன்றிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார்.
இருப்பினும் குறித்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



