இலங்கையில் எகிறும் மரக்கறிகளின் விலை.

0

தற்போது இலங்கையில் மரக்கறிகளின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ள நிலையில் நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் பலத்த அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில் நுவரெலியா வாராந்த சந்தையில் மலையக மற்றும் கீழ் நாட்டு மரக்கறிகள் ஒரு கிலோ 400 ரூபாய்க்கு விற்பனையாகும் அதேவேளை ஒரு கிலோ தக்காளி 600 ரூபாவுக்கும் அதிகமாகவும், ஈரப்பலா ஒன்று 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

அத்துடன் நுவரெலியா வாராந்த சாலைகள் மரக்கறிகளின் விலை அதிகரிப்பால் வியாபார நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுவதாக வர்த்தகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும் கடந்த சில நாட்களில் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மரக்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Leave a Reply