தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையை காரணத்தினால் இலங்கையின் 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பதுளை, கொழும்பு, மாத்தளை, நுவரெலியா , இரத்தினபுரி, காலி, கம்பஹா, களுத்துறை, கண்டி,கேகாலை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கு குறித்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் கண்டி, கேகாலை, குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



