நாட்டில் முகக்கவசம் அணியாத இருவருக்கு நடந்த சம்பவம்.

0

இலங்கையில் மீண்டும் கொவிட் தொற்றின் வீரியம் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் பொதுவிடங்களில் முகக் கவசம் அணியாமல் ஊரடங்கு நேரம் நடமாடிய இவருக்கு தண்டப் பணம் விதிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு முக கவசம் அணியாமல் வெளியில் நடமாடிய இருவருக்கும் 22 ஆயிரத்து 500 ரூபாய் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் நாட்டில் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருந்த போது முக கவசம் அணியாமல் நடமாடிய ஒருவரும், ஊரடங்கு சட்டத்தை மீறியும் முக கவசம் அணியாமல் பொது இடத்தில் நின்ற மற்றொரு நபரும் பருத்தித்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இருக்கும் எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்றைய தினம் நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

Leave a Reply