இராகலை பகுதியில் தீ விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இதற்கமைய குறித்த தீ விபத்தில் ஐந்து நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் இந்த தீ விபத்தில் பெட்ரோல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வு பிரிவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு வலப்பனை நீதிமன்றத்தில் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்நிலையிலேயே ராகலை காவல்துறையினர் மேற்படி இராசாயன பகுப்பாய்வு அறிக்கை சமர்ப்பித்தனர்.
மேலும் குறித்த தீ விபத்துச் சம்பவம் கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி இராகலை தோட்டம் இலக்கம் 1 மத்திய பிரிவு தோட்டத்தில் உள்ள தனியார் வீட்டில் சம்பவித்துள்ளது.



