பொது இடங்களுக்கு செல்பவர்கள் கொவிட் தடுப்பூசி செலுத்திய அட்டையை கொண்டு செல்ல வேண்டும்.

0

இலங்கையில் பொதுவிடங்களில் பிரவேசிப்பவர்கள் கொவிட் தடுப்பூசி செலுத்திய அட்டையை கொண்டு செல்வது கட்டாயமாக்கப்படடுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெகிணன், சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல ஆகியோருக்கு இடையில் நேற்றைய தினம் சந்திப்பு இடம்பெற்றது .

இந்த சந்திப்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை பிரதிநிதியும் கலந்துகொண்டிருந்தார்.

மேலும் தொற்றிலிருந்து பாதுகாக்க படுவதுடன் ஏனையவர்களுக்கும் அது பரவுவதை தடுக்கும் நோக்கில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply