யாழில் மின்சார சபை முன்றலில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதற்கமைய கெரவல பிட்டியில் மின் நிலையத்தினை அமெரிக்காவிற்கு விற்பனை செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன் கெரவலப்பிட்டிய மின் நிலையத்தின் 40 வீத பங்கினை அமெரிக்காவுக்கு விற்பனை செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டணியினரின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அவ்வாறு இலங்கையின் அனைத்து இடங்களிலும் இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகங்களுக்கு முன்றலில் இன்று மதியம் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியில் உள்ள இலங்கை மின்சார சபையின் அணியின் தலைமை காரியாலயம் முன்றலில் இந்த போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



