பேராயரை சந்திக்கும் கிறிஸ்தவ நாடாளுமன்ற உறுப்பினர்களுகள்.

0

நாடாளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் கிறிஸ்தவ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் இடையில் விசேடகலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது..

இதற்கமைய குறித்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் பொரளை – வெல்கம பகுதியில் உள்ள ஆயர் பேரவையின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறும்.

அத்துடன் இலங்கையின் 12 ஆயர்களும் இந்த சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர் என குறிப்பிடப்படுள்ளது.

மேலும் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணை மற்றும் எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply