கூரைகளின் மேல் ஏறி ஆர்ப்பாட்டம் நடத்திய கைதிகள்.

0

வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் கூரைகளின் மேல் ஏறி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டம் காரணத்தினால் செப்பல் பிரிவின் கூரைக்கு சேதம் விளைவிக்க பட்டுள்ளது.

இதனால் சுமார் ஒரு கோடி ரூபாய் அளவில் நாட்டம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் பொருள் சேதத்தினை விளைவித்தமை தொடர்பில் சிறை கைதிகளுக்கு எதிராக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு கடந்த ஒரு மாத காலத்திற்கு அதிகமாக கூரையின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த சிறைக்கைதிகளை கூரையில் இருந்து கீழே இறக்குவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

மேலும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த 10 கைதிகள் தங்களது தண்டனை காலத்தை குறைக்குமாறு வலியுறுத்தியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது .

Leave a Reply