இலங்கையில் மின் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மின் கட்டணத்தை தொடர்ந்து செலுத்தாமல் இருந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு மின் விநியோகத்தை இடைநிறுத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் இடம்பெற்றுவரும் கொவிட் அச்சுறுத்தல் சூழ்நிலை காரணத்தால் மின் கட்டணம் செலுத்துவதில் மக்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது.
ஆனால் மாதாந்த கட்டணத்தை செலுத்தும் வாடிக்கையாளர்கள் கூட தொடர்ந்து கட்டணத்தை செலுத்தாமல் இருக்கின்றனர்.
இதன் பிரகாரம் பல மாதங்களாக மின் கட்டணம் செலுத்தாமல் இருந்த வாடிக்கையாளர்களுக்கு சிவப்பு பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சிவப்பு பட்டியலானது மின்சாரத்தை துண்டிப்பதற்கு முன்பான எச்சரிக்கையாகும் என அறிவிக்கப்படுள்ளது.



