19 காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்.

0

19 காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல் திணைக்களம் தெரிவித்துள்ளது .

இதற்கமைய குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதிக் காவல்துறை மா அதிபர் ரஷாத் ரணசிங்க உள்ளிட்ட இரண்டு பதில் பிரதி காவல்துறை மா அதிபர்கள் உள்ளிட்ட 19 காவல்துறை அதிகாரிகளுக்கே குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அனுமதியை அரச சேவைகள் ஆணைக்குழுவின் அடிப்படையில் சேவையின் தேவை கருதி குறித்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த இடமாற்றத்திற்கு அமைய ஒரு சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் 7 உதவி காவல்துறை அத்தியட்சகர் மற்றும் 7 காவல் நிலைய பொறுப்பதிகாரி களுக்கும் இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது

Leave a Reply