இலங்கையில் ஏற்பட்டுள்ள கொவிட் அசாதாரண சூழ்நிலை காரணத்தினால் புகையிரத சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் புகையிரத சேவைகளை இன்று முதல் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பருவச் சீட்டினை கொண்டவர்களுக்கு மாத்திரம் இன்று முதல் தொடருந்தில் பயணிக்க முடியும்.
அத்துடன் பருவ சீட்டு தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக தொடருந்து நிலையங்களில் காவல்துறையினர் கடமையில் ஈடுபடவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.



