தமிழகத்தில் 100 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை இயக்குவதற்கு அனுமதி.

0

உலகம் முழுவதும் கொவிட் தொற்றின் தாக்கம் பன்மடங்காக அதிகரித்து வந்த நிலையில் நாடு பூராகவும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு இருந்தது.

இதன் பிரகாரம் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கோயில்கள், தியேட்டர்கள், மால்கள் உட்பட பல்வேறு விடயங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.

அத்துடன் தற்போது தொற்று பாதிப்பு குறைவடைந்து வந்த நிலையில் அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன.

இதனிடையே கொவிட் தொற்று பரவல் காரணத்தினால் 50 சதவிகித இருக்கைகளுடன் மாத்திரம் தியேட்டர்களை திறப்பதற்கு தமிழ்நாடு, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்கள் அறிவித்திருந்தனர்.

இதன் பிரகாரம் தியேட்டர்களும் திறக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் கொவிட் ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவதன் ஒரு பகுதியாக ஆந்திர மாநில அரசு புதிய வழிகாட்டல்களை அறிவித்துள்ளது.

இந் நிலையில் அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு 100 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை இயக்குவதற்கு ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply