பெரும் போகத்திற்கு தேவையான உரத்தை வழங்குமாறு கோரி விவசாயிகளினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
உரிய பசளைகள் இல்லாதன் காரணத்தினால் பயிர்கள் அழிவடைவதாக விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் அரசாங்க நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட பொட்டாசியம் குளோரைடு சேதனப் பசளை தொகை பல்வேறு மாவட்டங்களுக்கும் வினியோகிக்கப் பட்டுள்ளது என விவசாய துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, அனுராதபுரம், குருநாகல், புத்தளம் மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலேயே இந்த சேதனப் பசளை தொகுதியை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



