ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கு நடவடிக்கை.

0

தனியார்துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தனியார்துறை ஊழியர்கள் ஓய்வு பெறும் குறைந்தபட்ச வயது அதிகரிப்பதற்கு தயாரிக்கப்பட்ட சட்ட மூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய குறித்த விடயத்தை அமைச்சரவை பேச்சாளர் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது தனியார் துறையினரின் குறைந்தபட்ச ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கான சட்டமூலம் பற்றி தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.

அதற்கமைய தயாரிக்கப்பட்ட குறித்த சட்ட மூலமானது, பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்ட ஆடைக் கைத்தொழில் துறை மற்றும் வர்த்தகத் துறைகளில் தாக்கம் செலுத்தும் கொள்கை ரீதியானதும் சட்ட ரீதியானது மாணவர்கள் பற்றி ஆராயும் குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த குழுவில் எடுக்கப்பட்ட உடன்பாடுகளுக்கமைய முன்மொழியப்படும் சட்டம் நடைமுறைக்கு வரும் தினத்தில் 52 வயதை எட்டாத ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 வயதாக நீடிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply