சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகள் அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதற்கமைய264,200 சிகரெட்டுகளே இவ்வாறு காவல்துறை அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த சம்பவம் களனி – கோணவல – கொஹால்வில் வீதியில் இடம்பெற்றுள்ளது.
அத்துடன் வத்தளை ஹூணுப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த இருபத்தொரு வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகமைய, களனி – கோணவல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது அந்த வீட்டிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மேலும் ஒரு தொகை சிகரெட்டுகளுடன் 48 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த சிகரெட்டுக்களின் பெறுமதி இரண்டு கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



