மூன்றாவது தடுப்பூசியை வழங்குவதற்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி.

0

மூன்றாவது தடுப்பூசியை வழங்குவதற்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்படவுள்ளது.

இந்நிலையில் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே இந்த தடுப்பூசி வழங்கப்படும்.

சீனாவில் உற்பத்தி செய்யப்படும் சைனோபார்ம் மற்றும் சினோவெக் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களுக்கு மூன்றாவதாக பைசர் அல்லது மொடர்னா தடுப்பூசியை வழங்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களும் மூன்றாவது தடுப்பூசி செலுத்த வேண்டியது மிகவும் அவசியம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply