9 மாவட்டங்களில் உள்ளுராட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பமாகியுள்ளது.
இதற்கமைய தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கடந்த 9,6 ஆகிய திகதிகளில் இரு பிரிவுகளாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில் 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 23 ஆயிரத்து 998 பதவி இடங்களுக்கு நடந்த இந்த தேர்தலில் 79 ஆயிரத்து 433 பேர் பங்குபற்றினர்.
அத்துடன் இரு கட்டங்களையும் சேர்த்து 14 ஆயிரத்து 573 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 77.95 சதவித வாக்குகள் பதிவாகின.
மேலும் இந்த வார பதிவுகள் முடிவடைந்த நிலையில் வாக்குப் பதிவுக்காக பயன்படுத்தப்பட்ட 41 ஆயிரத்து 500 வாக்குப் பெட்டிகள் 74 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் 9 மாவட்ட உள்ளுராட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.



