யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!

0

யாழ்- பருத்தித்துறையில் பிறந்து ஒரு மாதங்களேயான குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தை வீட்டில் உயிரிழந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இவ்வாறு உயிரிழந்த குழந்தையின் தாய்க்கு கடந்த 22 ஆம் திகதி கொவிட் தொற்று உறுதிப் படுத்தப் பட்டிருந்தது.

இந்நிலையில் குழந்தைக்கு நேற்றைய தினம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் குறித்த பரிசோதனையில் அவருக்கு தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குழந்தையின் இறப்பு தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சட்ட வைத்திய அதிகாரி விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Leave a Reply