இலங்கையில் எதிர்வரும் நாட்களில் பாரிய அளவிலான நில அதிர்வுகள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் இல்லையென சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செயலமர்வின் போது குறித்த விடயத்துடுடன் தொடர்புடைய பேராசிரியர்கள் மற்றும் கலாநிதிகள் இதனை தெரிவித்துள்ளது.
அத்துடன் இதுவரை காலமும் பதிவான நில அதிர்வுகளில் 98% புவியியல் எல்லை பகுதிகளில் உணரப்பட்டன.
அதற்கு வெளியே 2% நில அதிர்வுகளை பதிவானதாகவும் அது தொடர்பில் பொதுமக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது.



