நான்கு கட்டங்களில் பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானம்.

0

பாடசாலைகளை நான்கு கட்டங்களில் திறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக கொவிட் தடுப்பு ஜனாதிபதி செயலணி, சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் இணைந்து தொழில்நுட்பக் குழு ஒன்றை அமைத்துள்ள நிலையத்தில் இந்தக் குழுவினால் எடுக்கப்படும் தீர்மானத்திற்கு அமைய பாடசாலைகள் மீள திறக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தற்போது 12 வயதுக்கு குறைவானவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இதன் பிரகாரம் அவர்களை கொவிட் தடவல் குறைவடைந்த பின்பு தரம் 1 முதல் 5 வரையான வகுப்புகளை கொண்ட 3,884 பாடசாலைகளில் முதற்கட்டமாக ஆரம்பிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் 12-19 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களுக்கு இருவர் பிரிவுகளாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோரின் அறிவுறுத்தல்களை பெற்று ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்னர் பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்பார்த்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply