வங்கி ஊழியர்களின் கவனக்குறைவால் 51/2 லட்சம் ரூபாய் பணம் தவறுதலாக ஒரு நபருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த பணம் பிகாரி ககாரியா மாவட்டத்திற்கு உட்பட்ட பக்தியூர் கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் தாஸ் என்பவருக்கே அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பணத்தை திருப்பி ஒப்படைக்குமாறு ரஞ்சித் தாசுவுக்கு வங்கி அதிகாரிகளினால் கடிதம் அனுப்பப்பட்டது.
ஆனால் குறித்த நபர் அந்த பணத்தை எடுத்து முன்னராகவே செலவழித்து விட்டார்.
இந்நிலையில் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை மாறாக இந்த பணம் பிரதமர் மோடி தனக்கு பரிசாக அளித்தது என்று குறிப்பிட்டார்.
இதனால் வங்கி ஊழியர்கள் அனைவரும்
பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதன் பிரகாரம் காவல்துறையினர் ரஞ்சித் தாசை கைது செய்து சிறையில் அடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



