2021 ஆண்டின் 18 வது இலக்க நிதி சீராய்வு சட்டமூலத்தில்சபாநாயகர் கையப்பமிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் கடந்த 7ஆம் திகதி குறித்த சட்ட மூலமானது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 134 வாக்குகளும் எதிராக 44 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் சபாநாயகர் அதில் கையொப்பமிட்டதனூடாக இந்த சட்டம் நேற்றைய தினம் முதல் அமுலுக்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



