விநாயகர் சதுர்த்தியான இன்றைய தினம் வீட்டில் வைத்து வழிபடும் சிலைகளை கோவில்களில் ஒப்படைக்கலாம்!

0

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியான இன்றைய தினம் வீட்டில் வைத்து வழிபடும் சிலைகளை கோவில்களில் ஒப்படைக்கலாம் என இந்த சமைய அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரர் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் அச்சுறுத்தல் நிலையினைக் கருத்திற்கொண்டு சமய விழாக்கள், மதம் சார்ந்த ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

ஆகவே பக்தர்கள் அனைவரும் தங்களது இல்லங்களில் வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை ஆலயங்களில் வைத்திட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறு கோவில்களில் பெறப்படும் சிலைகளை நிலையான வழிபாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி சுற்றுச்சூழலுக்கு பாதிக்காத வகையில் நீர்நிலைகளில் கரைப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டரின் வழிகாட்டுதலை பெற்று உரிய நடவடிக்கைகளை சாராய சார்நிலை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply